அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயால் அரிசோனா-உட்டா சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் பற்றி எரியும் தீயை அணைக்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்ய சென்ற விமானம் ஒன்று திடீரென தீயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இரு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.