Categories
மாநில செய்திகள்

தமிழக பொங்கல் பரிசில் கூடுதல் ரொக்கம், வெல்லம், செங்கரும்பு சேர்க்கப்படுமா….? அடுத்தடுத்து வரும் கோரிக்கைகள்….!!!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர் களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாததால் பல விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழக அரசு கரும்பை பொங்கல் பண்டிகையின் போது கொள்முதல் செய்யும் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

அதோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்கல் பரிசில் கரும்பை சேர்க்க வேண்டும் எனவும் ரொக்க பணத்தை கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் சிபிஎம் கட்சியின் தலைவர் கே. பாலகிருஷ்ணன் இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் பொருட்களோடு கூடுதலாக கரும்பு மற்றும் வெல்லம் உள்ளிட்ட பல பொருட்களை சேர்க்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன். விவசாயிகளிடமிருந்து செங்கரும்பு மற்றும் வெல்லம் போன்றவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்தால் சந்தையிலும் அந்த பொருள் களுக்கு நல்ல விலை போகும். பொங்கலின் இனிமையும் பெருகும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பொங்கல் பரிசில் சில பொருட்களை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் வருவதால் கூடுதல் பொருட்கள் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |