விவேக்கின் சவாலை அஜித் ஏற்பாரா? என்று சமூக வலைத்தளங்கள் செய்தி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பை காட்டி தனக்கென ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் விவேக்கின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ‘தாராள பிரபு’ பிரமோஷனில் விவேக் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம், பெரிய நடிகர் ஒருவருக்கு சவால் விட வேண்டும் என்றால் யாரிடம் விடுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விவேக், தல அஜித் தன்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஒரு மரம் நட சொல்ல வேண்டும் என்று விவேக் கூறியுள்ளார்.
மேலும் இந்த சவாலை அவர் வாயால் கூறவில்லை என்றாலும் ஒரு அறிக்கையின் மூலமாக வெளியிட்டால் போதும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இச்செய்தி அஜித்திற்கு தெரியுமா என்றும் விவேக்கின் சவாலை அவர் ஏற்பாரா என்று இன்று வரை தெரியவில்லை. இச்செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.