செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாங்கள் தான் எதிர்க்கட்சி, மத்த யாருமே செயல்படல் என்று அண்ணாமலை சொன்ன மாதிரி எனக்கு தெரியல. பிஜேபி தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து சொல்கிறோம் என்று சொல்கிறார். மத்தவங்களை விட நாங்கள் ( பிஜேபி ) தான் சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னரா என எனக்கு தெரியல. அது மாதிரி எல்லாம் சொல்லுவாரா ?
நான் நாங்க திமுகவை எதிர்த்து செயல்படுகின்ற ஒரு எதிர்க்கட்சி என்று சொல்வேன். நான்தான் சிறப்பாக செயல்படுறேன், நான்தான் முதல் கட்சி என்று ஒரு கட்சியோட பொதுச் செயலாளராக சொல்லல. அதே மாதிரி அண்ணாமலையும் பேசுவாரான்னு தெரியல. ஆன்லைன் சூதாட்டம் மக்களைப் பாதிக்கும். இதனால் இந்த காலத்துல உயிரிழப்புகள் எல்லாம் நிறைய ஏற்படுகிறது. சூதாட்டம் என்பதே தடை செய்யப்பட வேண்டிய விஷயம். அதை தடை செய்வதற்கு தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மற்ற மாநிலங்கள் எல்லாம்….
அன்னைக்கு ஆளுநர் தரப்பு விளக்கத்தை நான் ஊடகத்தில் பார்த்தேன். மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்ட அரசாங்கம் கொண்டுவந்தது. ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு சாதகமாக நீதிமன்றங்களில் அவங்க முறியடித்து விடுகிறார்கள். அதனால தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவங்களை நான் கூப்பிட்டேன். தமிழ்நாட்டுல ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான முயற்சியில் தான் ஆளுநர் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள், அது என்னவென்று பார்ப்போம் என தெரிவித்தார்.