தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்
தபால் துறையில் மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தபால்துறை தேர்வுகளில் முதல்தாள் இனி அனைத்து மாநிலங்களுக்கும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இரண்டாம் தாள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் வேலுமணி இது குறித்து அளித்துள்ள பதிலில், தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அனைத்து இடங்களிலும் தமிழ் மொழிதான் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.