மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நவம்பர் 26ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசாங்கம், 26ஆம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிற விடுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும், தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் போராட்டம் நடத்தலாம் என எண்ணத்தோடு இருக்கும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பேரிடர் கால கட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் முடங்கிக்கிடந்த பணிகளைத் தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.