தெலுங்கானா மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதிக்காக ‘அண்ணாத்த’ படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால் பல முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அண்ணாத்த திரைப்படம் ஏற்கனவே பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது குறித்த ரிலீஸ் தேதியில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வருகின்றனர்.
அதன்படி வரும் தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் நடக்கவிருக்கிறது. ஆனால் தற்போது அம்மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.