Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாரம் ஒருமுறை வருவார்…. சும்மா இருக்க மாட்டார்…. 11 வயது சிறுமி…. தந்தை மீது பாலியல் புகார்…!!

சேலம்  அருகே தந்தையே தனது  சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக  பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சேலம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் இருவருக்கும் 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். 13 வயது மகள் சேலம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், 11 வயது மகள் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியிலும்  படித்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்க திடீரென 11 வயது சிறுமி தனது தாயாருடன் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது தந்தை மீது புகார் அளித்தார். அந்த புகாரில், தனது தந்தை வார விடுமுறையின் போது வீட்டிற்கு வந்து தனது தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் என்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தந்தை பாலியல் தொந்தரவு செய்வதை  நான் எனது அம்மாவிடம் பலமுறை கூறியுள்ளேன். நேற்று முன்தினம் எனது அம்மாவே இதனை நேரில் பார்த்து விட்டார். ஆகையால் எனது தந்தை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியின் தந்தை மற்றும் உடற்கல்வி இயக்குனர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |