மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தி வருகிறார்.
வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படும் நிலையில் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. சலூன் கடைகள், டீ கடைகள், அத்திவாசிய கடைகள் ஆட்டோக்கள் இயக்கம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கத்தை பொறுத்து மேலும் சில தளர்வுகள் வழங்கப்படும் என முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஊரடங்கை விலக்கலாமா? அல்லது மேலும் சில தளர்வுகள் அளித்து ஊரடங்கை நீட்டிக்கலாம் என்பது குறித்து நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். மருத்துவ நிபுணர் குழுவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். தொற்றின் நிலை, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த பரிந்துரையை நிபுணர் குழு வழங்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனையில் தற்போது ஊரடங்கை ரத்து செய்ய வேண்டாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக்கு பின்னர் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.