Categories
தேசிய செய்திகள்

விடிவு கிடைக்குமா ? ப.சிதம்பரத்திற்கு ….. இன்று தீர்ப்பு ….!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது.

இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிணைக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இந்தத் தீர்ப்பை நீதிபதி பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிக்கவுள்ளது.

Categories

Tech |