அண்மையில் திமுகவிலிருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிமுகவில் இணைவதாக இன்று காலை முதல் பரவலாக செய்திகள் வெளியாகின. இது குறித்து விளக்கம் அளித்த சுப்புலட்சுமி ஜெகதீசன், நான் வீட்டில் தான் இருக்கின்றேன். நான் எங்கேயும் போகவில்லை. அரசியலில் இருந்து ஓய்வு என்று என்னுடைய அறிக்கையிலேயே தெரிவித்துள்ளேன். அப்படி இருக்கும்போது ஏன் நான் திரும்பவும் அரசியலுக்குள்ள போக போறேன்.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கின்ற காலத்திலேயே நான் அந்தக் கட்சியின் செயல்பாடு பிடிக்கவில்லை என்று திமுகவில் வந்து சேர்ந்தவள். இப்போ போயும் போயும் எடப்பாடி தலைமையில் இருக்கிற அதிமுக கட்சியில் போய் சேருவேணா ? யாரோ ஒருவர் சமூக வலைதளங்களில் எல்லாம் வதந்தியையும், அவதுரையும் கிளப்பி விட்டு இருக்கிறார்கள். இனிமேல் நான் போய் சேர்வதற்கு திராவிடர் திராவிட கழகத்தை தவிர வேறு தகுதியான கட்சி தமிழ்நாட்டில் ஏதும் இல்லை. எந்த கட்சியில் சேர்வது போல எண்ணம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.