Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து மண்ணில் வரலாற்று சாதனைப் படைக்குமா இந்தியா?

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலாம் ஐந்தாவது டி20 போட்டி இன்று மதியம் 12:30 மணிக்கு மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கடைசி டி20 போட்டியையும் கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் வேறெந்த அணியும் செய்யாத சாதனையைப் படைக்க காத்துக்கொண்டிருக்கிறது.

ஏனெனில் வெறு எந்த அணியும் இதுநாள் வரை நியூசிலாந்துக்குச் சென்று, அந்த அணியை டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்தது இல்லை. ஆனால் தற்போது இந்திய அணிக்கு அந்த வாய்ப்பானது கிட்டியுள்ளது. ஏற்கனவே ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய் அணி கைப்பற்றியுள்ளது.

ஒருவேளை இன்றையப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தும்பட்சத்தில் இச்சாதனையைப் படைத்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் படைக்கும்.

இந்தியா :

இந்திய அணியைப் பொறுத்தவரையில் இளம் வீரர்களான கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உச்சகட்ட ஃபார்மில் உள்ளதால், எந்தச் சூழ்நிலையிலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் திறன் படைத்தவர்கள். மேலும் கடந்த போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கப்பட்டார்.

இந்திய அணி

ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்த சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இந்தப் போட்டியில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி கிடைக்கும் பட்சத்தில் அவர் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.

அதேபோல் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரையில் தங்களது பணியை சிறப்பாகவே செய்துவருவதால் மீண்டும் இந்தியா கடந்த போட்டியில் விளையாடிய அணியுடனே களமிறங்கும் என ரசிகர் வட்டாரம் தெரிவிக்கிறது.

நியூசிலாந்து :

நியூசிலாந்து அணியில் முன்ரோ கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை மைதான முழுவதும் சிதறடித்தார். அதேபோல் இந்தப் போட்டியிலும் அவர் தனது அதிரடியை தொடங்குவார் என்பதால் இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

மேலும் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த வில்லியம்சன் மீண்டும் இன்றையப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கப்தில், டெய்லர் என அனுபவ வீரர்கள் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில் இன்றையப் போட்டியில் அதிகப்படியான வெற்றிவாய்ப்பு நியூசிலாந்து அணி பக்கமேவுள்ளது.

நியூசிலாந்து அணி

ஆனால் அந்த அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் சூப்பர் ஓவர்வரை சென்று தோல்வியைத் தழுவியது. ஏனெனில் பேட்டிங்கில் அதிரடி வீரர்கள் இருக்கும் பட்சத்தில் பந்துவீச்சில் போல்ட், ஃபர்குசன் இல்லாததால் கடந்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியது மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

மைதானம்:

இன்றையப் போட்டி தொடங்கவுள்ள பே ஓவல் மைதானமானது பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான மைதானம் என்பதால் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்குத் கொஞ்சம் நெருக்கடிதான். ஆனால் இந்த மைதானத்தில் நியூசிலாந்து அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது.

டி20 அட்டவணை

ஆனால் இந்த மைதானதில் கடந்தாண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 243 ரன்களை வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து அணி தனது வெற்றியை நோக்கிப் போராடுமென்பதில் ஐயமில்லை.

உத்தேச அணி விவரம் :

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, சிவம் தூபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, பும்ரா, சாஹல்.

நியூசிலந்து அணிக்கெதிராக இதுவரை இந்திய அணி

நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், காலின் முன்ரோ, டிம் செஃபெர்ட், ராஸ் டெய்லர், சாண்ட்னர், டிம் சவுதி, இஷ் ஷோதி, ப்ளயர் டிக்னர், ஸ்காட் குகலீஜின், ஹமீஷ் பென்னட்.

Categories

Tech |