இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது T20 போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெறும் டி20 தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது.
ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளில் அபார வெற்றி பெற்றது . இந்த நிலையில், 3வது போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் நியூசிலாந்தில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.
தற்போது வீரர்கள் இந்திய வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பதால்இந்திய அணி நிச்சயமாக தொடரை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரன் குவிப்பில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், கோஹ்லி தொடர்ந்து அசத்தி வருகின்றனர். பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக பூம்ரா, ஜடேஜ மிகத் துல்லியமாகப் பந்துவீசி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர். எனவே இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி கணக்கை தொடருமா அல்லது நியூசிலாந்து இந்தியாவின் வெற்றிக்கு முற்றுபுள்ளி வைத்து தனது கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.