பிரான்சில் கொரோனா ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
பிரான்சில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமானால் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்குப் பின் பேசிய அரசு செய்தித் தொடர்பாளரான கேப்ரியல் அட்டல் கூறியதாவது,பிரான்சில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் புதிய எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. இருப்பினும் மக்கள் தொடர்ந்து விதிகளைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
இப்போது இருக்கும் சூழல் நெகிழ வைக்கும் வகையிலும் இல்லை, வெற்றி பெற்றுவிட்டோம் என்று கொண்டாடும் அளவிலும் இல்லை. இதுவரை 300 பேருக்கு புதிய வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆகையால் பள்ளிகள் திறந்த பின் பயணம் தொடங்கும் நிலையில் உள்ளதால் கொரோனா மீண்டும் பரவும் என்று மருத்துவர்கள் பதற்றமாக உள்ளனர். ஆகையால்,பிரான்சில் தற்போது அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் வாரங்களில் தளர்த்தப்பட்ட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.