பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துயிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்த மாட்டேன் என்றும், மேக்கப் போட்டால் ஒருவருடைய அழகு மாறிவிடாது என்று கூறியுள்ளார்.
மேக்கப்புடன் என்னை பார்ப்பவர்கள் நீங்கள் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என்று கூறுகிறார்கள். அதனால் தான் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன் அதை தான் இயக்குனர்களும் விரும்புகிறார்கள் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.