சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , இந்தியா லெஜெண்ட் ஆடிய முதல் போட்டியில் இந்தியா லெஜெண்ட் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பாட்டீல் விளையாட்டு அகாடமி மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இரண்டாவது வெற்றி பெற போவது யார் ? என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணியை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சச்சின் – சேவாக் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இருவரும் உச்சகட்ட பார்மில் உள்ளனர்.
அதே ஸ்ரீலங்கா நடு வரிசையில் இறங்கும் யுவராஜ் சிங்கும் அட்டகாசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதே போல ஸ்ரீலங்கா அணியின் கேப்டன் பந்து வீச்சு , பேட்டிங்க என கலக்கியுள்ளதால் இந்த போட்டி பரபரப்பு பஞ்சம் இருக்காது.
இந்திய லெஜெண்ட் அணி :
சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், இர்பான் பதான், அஜித் அகர்கர், சஞ்சய் பங்கர், முனாஃப் படேல், முகமது கைஃப், பிரக்யன் ஓஜா, சாய்ராஜ் பஹுத்துலே, சமீர் திகே.
ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணி:
தில்லகரத்ன தில்ஷன் (கேப்டன்), டி விஜேசிங்க, சாமரா கபுகேதரா, சாமிந்த வாஸ், ஃபர்வீஸ் மஹாரூப், மார்வன் அட்டப்பட்டு, முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத், ஆர் கலுவிதரணா, எஸ் சேனநாயக்க, டி துஷாரா, டி சந்தம்பி.