Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம் பங்கேற்குமா ? மக்கள் நீதி மய்யம் ……. தீடிர் ஆலோசனையில் நிர்வாகிகள் ..!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது.

Image result for EDAPPADI VS KAMAL HASSAN

தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாமா ? அல்லது வேண்டாமா என்று அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |