Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும்.. முதல்வர் பதில்!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் 29ம் தேதி திங்கட்கிழமை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கடைகளில் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும். வீட்டுக்கு திரும்பியவுடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொதுமக்கள் தங்களின் வீட்டையும், வீட்டில் உள்ள கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கொரோனா தொற்று நோயை குணப்படுத்த எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள், அதனை பின்பற்றி நமது மருத்துவர்கள் சிகிச்சையளித்து நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

Categories

Tech |