Categories
கல்வி தேசிய செய்திகள்

பாடச்சுமை குறைக்கப்படுமா? மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு..!!

ஆன்லைன் வகுப்புகள் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர்.

கொரோனா கால பொது முடக்கம்  பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுகின்றது. இந்த கல்வி ஆண்டு தொடங்கி மூன்று மாதங்களாகியும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் குறைப்பு போன்ற எந்த ஒரு விஷயத்தையும் அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மூன்று மாதங்களாக இணையம் வாயிலாக மெட்ரிக் பள்ளிகள் வகுப்புக்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன.

மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் மூலமாக மூலம் சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் அரசுப் பள்ளிகளிலும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. பல மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு போன் இல்லாத ஒரு சூழலிலும் இருக்கிறது. அதேபோல் கேபிள் டிவி இல்லாத வீடுகளில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாலும், பாடத்திட்டம் குறைப்பு குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகாத நிலையிலும் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசு முறையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்,  பாடத் திட்டம் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Categories

Tech |