Categories
அரசியல்

மது விற்பனையை எதிர்க்கும் திமுகவின் குடும்பத்தினர் நடத்தும் மது ஆலையை மூடத்தயாரா? : செல்லூர் ராஜு

மது வேண்டாம் எனக்கூறும் திமுகவினர் அவர்களது குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூடத்தயாரா? என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் கருப்பு உடையணிந்து, கருப்புக் கொடியேந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

அவருடன் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். அதேபோல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் இல்லங்களிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல, சில இடங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்த திமுக கட்சியினரின் குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூடத்தயாரா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |