தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFO குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதாவது தொழிலாளர் வைப்பு நிதியில் அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதேபோன்று அவருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமும் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு இதில் பென்ஷன் திட்டமும் இருப்பதால் ஊழியர்கள் இதைத் தேர்வு செய்தால் சம்பளத்தில் இருந்து 8.33 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.
இதற்கு ஒரு வருடத்திற்கு அதிகபட்ச தொகையாக 15,000 வரை செலுத்தப்படும் நிலையில், 1000 ரூபாய் வரை பென்சனாக வழங்கப்படும். இந்த குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி கொடுத்த நிலையில் அரசு இதுவரை எவ்வித முடிவும் எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதாவது தொழிலாளர் பென்ஷன் திட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு பதிலையும் கூறவில்லை.