Categories
சினிமா தமிழ் சினிமா

”இந்தியன் 2” திரைப்படம் துவங்குமா….? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்ஹாசன்….!!!

‘இந்தியன் 2’ படம் குறித்த கேள்விக்கு கமல் ஹாசன் பதிலளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.

கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில் | Kamal  Haasan has said that the release of Vikram on the birthday of former Chief  Minister Karunanidhi is a real event |

 

ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்து ”பத்தல பத்தல” பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன? - BBC News  தமிழ்

 

இதனையடுத்து, இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிருபர்கள் ”இந்தியன் 2” படம் பற்றி கமலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், ”இந்தியன் 2” திரைப்படத்தை கண்டிப்பாக மீண்டும் தொடங்குவோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இதன் மூலம் இந்த படம் கைவிடப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு கமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |