‘தலைவி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று பரவி வரும் செய்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஏஎல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார்.
எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.மேலும் சமுத்திரக்கனி, மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தலைவி திரைப்படமும் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தலைவி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இச்செய்தியை தலைவி படக்குழுவினர் மறுத்துள்ளனர்.மேலும் தலைவி திரைப்படத்தை முதலில் திரையில் வெளியிட்ட பின் ஓடிடியில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.