Categories
உலக செய்திகள்

கொரோனா வைராஸால் ஜப்பானில் ஒலிம்பிக் ரத்தாகுமா?

சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைராஸால் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா அல்லது தொடருமா என்பது குறித்து சர்வதேச டோக்கியோ ஒலிம்பிக்கின் முதன்மை அலுவலர் தோஷிரோ முடோ கூறியுள்ளார்.

சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோரை முழுமையான பரிசோதனை செய்த பிறகே, அனுமதித்து வருகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவில் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சீனாவை தொடர்ந்து அண்டை நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸால் வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைமை செயலாளர் தோஷிரோ முடோ கூறியதாவது,

“ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில் கொரோனா வைராஸ் வேகமாக பரவிவருவது மிகவும் கவலையாக இருக்கிறது. இதனால், சில ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகளும் சீனாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால், ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகள் நிம்மதியாக நடத்தப்படும். இதனால், ஒலிம்பிக் போட்டி எவ்விதத்திலும் ரத்தாகாது” என்றார். 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Categories

Tech |