கல் உப்பின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே இருக்கும் கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை, பத்தனேந்தல், திருப்பாலைக்குடி ஆகிய ஊர்களில் ஏராளமான உப்பளபாத்திகள் இருக்கின்றது. இங்கே வருடம் தோறும் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் வரை உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் ஆரம்பித்திருப்பதால் உப்பளங்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் பாத்திகளில் சேகரித்து வைத்த கல் உப்புகள் அனைத்தும் மழை நீரில் நனைந்து வீணாவதை தடுப்பதற்காக தார்பாயால் மூடி வைக்கப்படுகின்றது. அவ்வபோது இந்த கல்லுப்பு லாரி மூலம் தூத்துக்குடி, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது. மழைக்காலம் முடியும் வரை கல் உப்பு விலை அதிகரிக்கும் என சொல்லப்படுகின்றது. அக்டோபர் மாதம் வரை ஒரு டன் 2000 வரையில் விற்பனையான நிலையில் தற்போது கல் உப்பு 3000, 3500, 4000 என விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.