Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா..? படக்குழு விளக்கம்…!!!

ரஜினியின் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று பரவி வரும் தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் தற்போது திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதால் வசூலில் பாதிப்பு ஏற்படும் எனும் நோக்கில் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸை அடுத்த வருடம் பொங்கலுக்கு தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் அண்ணாத்த படக்குழுவினர் இதுகுறித்து கூறியதாவது, இந்த தகவல் எப்படி உருவானது என்றே தெரியவில்லை. அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்ற தகவலை அறிவித்ததால் அதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் டீசர் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தள்ளி போகும் என்ற தகவல் உண்மையல்ல என்று படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |