Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ மனு ஏற்கப்படுமா? தொடங்கியது பரிசீலினை…எதிர்பார்ப்பில் திமுக,மதிமுக..!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை தொடங்கியது.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர்  என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.

Image result for வைகோ

இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான  சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்கிறார். தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வைகோவின் மனு ஏற்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு திமுக,மதிமுக கட்சினரிடையே இருந்து வருகிறது.இதில் வைகோ மனு ஏற்கப்பட்டால் என்.ஆர்.இளங்கோ தனது வேட்பு மனுவை வருகின்ற 11ஆம் தேதி பெற்றுக்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

 

 

 

Categories

Tech |