வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விஜய் மல்லையா SBI உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ருபாய் கடன் பாக்கியை திருப்பி செலுத்தாமல் இந்தியாவிலிருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசாங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. ஆனால் மல்லையா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தக்கூடாது என லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில், அவர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் இது போன்ற வழக்குகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லப்படுகிறது. அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.