Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’…. ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா? வெளியான தகவல்…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் நிலை வேகமாக வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கும்.

ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கக்கூடும் என்று கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பிரஷாந்த் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |