வேறு ஒரு மாநிலம் பாதிக்கப்பட்டால் விட்டுவிடுவோமா என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தெற்கு ரயில்வே மேலாளர் பொது மேலாளரை ராகுல் ஜெயின் உடன் ஆலோசனை ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன் எம்பி கூறும் போது, சென்ட்ரல் முதல் செங்கல்பட்டு வரை ரயில் நிலையத்தில் கழிவறை வசதிகள் குறைவாக உள்ளன.எமர்ஜென்சி வந்தபோது கலைஞர் எழுந்து எப்படி குரல் கொடுத்தாரோ அதே போல இன்று ஸ்டாலின் குரல் கொடுக்கின்றார். காஷ்மீரில் இன்று ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.
அங்குள்ள அனைத்து கட்சி தலைவர்களும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல,காஷ்மீரில் வாழும் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 13 நாட்களாக வீட்டு சிறையில் இருக்கிறார்கள். ஆனால் அமைதி திரும்பிவிட்டது என்று பொய் சொல்கிறார்கள். காஷ்மீரில் நடந்தது மனித உரிமை மீறல் என்று நாங்கள் இந்த பிரச்சினையை பார்க்கின்றோம். காஷ்மீர் போல வேறு ஒரு மாநிலம் பாதிக்கப்பட்டால் விட்டுவிடுவோமா என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.