ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியபோது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஜி 7 நாடுகளின் உச்சிமாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் பிரதமர் மோடி வெளியுறுத்தியுள்ளார். மேலும் சீனா இந்தியா எல்லை பிரச்சனை, உலக சுகாதார அமைப்பின் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.