Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா….? வெண்பாவின் பதில்…!!!

சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பதிலளித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது. மேலும் இச்சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஹினியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்ட வருகிறது.

இதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரீனா தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதனை அறிந்த ரசிகர்கள் இனி நீங்கள் பாரதிகண்ணம்மா சீரியலில் வரமாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த பரீனா வெண்பா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன். எனக்கு நடிப்பதற்கு எந்த ஒரு சிரமமும் இல்லை. முடிந்தவரை நானே தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |