பிரிட்டனில் மகாராணியாரின் மறைவை தொடர்ந்து மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ், தன் மூத்த மகன் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்தரினை இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார்.
பிரிட்டன் நாட்டின் மகாராணியார் தன் 96 வயதில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் மகனான இளவரசர் சார்லஸ் நேற்று மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் தன் உரையில், இளவரசர் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்ரினை இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் வில்லியம் மற்றும் கேத்தரின் இருவரின் அதிகாரப்பூர்வமான இணையதள முகப்பு பக்கங்களிலும் இளவரசர் மற்றும் இளவரசி என்று குறிப்பிடப்பட்டது. இதேபோன்று தம்பதியரின் பிள்ளைகளுக்கும் இளவரசர் பட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது.