Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம்”…! “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்பாரா”…?

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின்  சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் பங்கேற்க மாட்டார் ,என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையே , 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 2ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த, முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் 2 வது போட்டி நாளை (ஜூன் 10 ம் தேதி)  எட்ஜ்பாஸ்டனில்  நடைபெற உள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான சான்ட்னெர், கைவிரலில் காயம் ஏற்பட்டதால், அவர் 2 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார், என அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டனான  கேன் வில்லியம்சனுக்கு,  இடது முழங்கையில் காயம் ஏற்பட்டதால் , இந்த 2 வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது குறித்து இன்னும் உறுதியாகவில்லை.  இந்த காயத்துடன் வில்லியம்சன் 2 வது டெஸ்ட் போட்டியில் விளையாடினால், மீண்டும் காயத்தின் வலி அதிகரிப்பது மட்டுமில்லாமல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும் , என்று இவரை பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார். இதனால் கேன் வில்லியம்சன் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |