குடும்ப உறவை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் விமல் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் விமல் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். விமல் நடிக்கும் இந்த படம் குடும்ப உறவை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தில் ஆடுகளம் நரேன், பாலசரவணன், அனிதா சம்பத் மற்றும் பலர் நடிக்கின்றனர்,
மேலும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் அண்ணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.