தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒரு சில கட்சிகளில் கூட்டணிக்கு தொகுதி வழங்குவது குறித்து இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் களவாணி படத்தில் நடித்து பிரபலமான நடிகர் விமல் தன்னுடைய மனைவியான அக்ஷயாவை திமுக சார்பாக மணப்பாறை தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகின்றது. இதையடுத்து விமல் தன்னுடைய டாக்டர் மனைவியான அக்ஷயாவோடு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்பமனு விருப்ப மனு அளித்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதையடுத்து தனது மனைவிக்காக விமல் ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்றும், அக்ஷயாவுக்கு சீட்டு கிடைக்கும் என்றும் விமல் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர் டாக்டரம்மாவுக்கு ஏன் இந்த அரசியல். மருத்துவமனை குடும்பம் என்று சந்தோஷமாக இருக்கலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர். மணப்பாறை விமலின் சொந்த ஊர் என்பதால் அங்கே போட்டியிட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.