Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் : 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ….. சாதனை படைத்த ஜோகோவிச்….!!!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெரேட்டினியை வீழ்த்திய ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் .

‘கிராண்ட்ஸ்லாம்’போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் பெரேட்டினியை எதிர்கொண்டார். இந்த போட்டி கிட்டத்தட்ட 3 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதில் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை தோற்கடித்து ,வெற்றி பெற்ற ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஜோகோவிச் நடப்பு ஆண்டில்  நடந்த ஆஸ்திரேலிய மற்றும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதை தொடர்ந்து ,விம்பிள்டன்  டென்னிஸ் போட்டியிலும் வெற்றி பெற்று வாகை சூடினார்.

Categories

Tech |