Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் : 3-வது சுற்றுக்கு முன்னேறிய சானியா, போபண்ணா ஜோடி …!!!

விம்பிள்டன் டென்னிசில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் இந்திய ஜோடி சானியா, போபண்ணா வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் .

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று  வருகிறது . இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா – ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனை சேர்ந்த எமிலி வெப்லி – ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடி சானியா- போபண்ணா வெற்றி பெற்றது. இதில் 47 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் இந்திய ஜோடி சானியா ,போபண்ணா வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்

Categories

Tech |