விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனைஆஷ்லி பார்ட்டி, ரஷ்யாவின் மெட்வதேவ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் .
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனையான சினி கோவாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் , குரோஷியா வீரரான சிலிச்சை எதிர்கொண்டார் . இதில் 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கடும் போராட்டத்திற்கு பின் மெட்வதேவ் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு நுழைந்தார்.