விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி, கரோலின பிளிஸ்கோவா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் .
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி பார்ட்டி, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா , பெலாரஸ் வீராங்கனையான அரினா சபலென்காவுடன் மோதினார் . இதில் என்ற 5-7, 6-4, 6-4 நேர் செட் கணக்கில் கரோலினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் . இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி, கரோலின பிளிஸ்கோவா மோதிக்கொள்கின்றனர் .