Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் : ஜோகோவிச்,பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ….!!!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இத்தாலிய வீரராக மேட்டியோ பெரெட்டினி சாதனை படைத்தார் .

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் , ‘ நம்பர் 1’ வீரருமான செர்பியாவை சேர்ந்த  ஜோகோவிச்,  கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார் . இதில் 7-6, 7-5, 7-5  என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

இதையடுத்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரனான மேட்டியோ பெரெட்டினி , போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காசை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-0, 6-7, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெரெட்டினி  வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினி மோதிக் கொள்கின்றன.

Categories

Tech |