Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் …. காலிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்,  ஆஷ்லி பார்ட்டி ….!!!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்  ஜோகோவிச்,  ஆஷ்லி பார்ட்டி இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர் . 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடைபெற்ற  போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை  சேர்ந்த ஜோகோவிக், 20- வது நிலையில் இருக்கும் சிலி வீரர் கிறிஸ்டியன் காரினை எதிர்கொண்டார். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்திய ஜோகோவிச் கிறிஸ்டியன் காரினை வீழ்த்தி 6-2, 6-4, 6-2  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த  ரோஜர் பெடரர் , லாரன்சோ சொனாகாவை எதிர்கொண்டார். இதில் 7-5, 6-4, 6-2  என்ற நேர் செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதைத் தொடர்ந்து நடந்த மற்ற ஆட்டங்களில்  மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி) , டெனிஸ் ஷபோவலோவ் (கனடா ) மற்றும் கரென் கச்சனோவ்(ரஷ்யா ) ஆகிய வீரர்கள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

இதையடுத்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, பிரெஞ்சு ஓபன் டென்னிசின் சாம்பியனான செக்குடியரசு வீராங்கனை பார்போரா கிராஜ்சிகோவாவை  எதிர்கொண்டு 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி  வெற்றி பெற்று முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடந்த மற்ற ஆட்டங்களில் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா                (செக் குடியரசு), வீராங்கனை சபலென்கா(பெலாரஸ்) மற்றும் கரோலினா முச்சோவா  ,                 , துனிசியா வீரர் ஒன்ஸ் ஜாபிர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்.

Categories

Tech |