Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : 4 -வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் …!!!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று 4 -வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . 

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்  ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் நேற்று  நடைபெற்றது . இதில் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும் உலகின் முதல் நிலை வீரருமான  செர்பியாவை  சேர்ந்த ஜோகோவிச், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லாவை தோற்கடித்து , 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று  4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து நடந்த மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலையில் இருக்கும் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருபலே, ஸ்பெயின் வீரர் அகுட் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளன.

இதை தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய முன்னாள் நம்பர் 1 வீரரான  ஆன்டி முர்ரே, கனடாவை சேர்ந்த  டெனிசிடம் மோதினார். இதில் 4 -6, 2-6,  2-6 என்ற நேர் செட் கணக்கில் ஆன்டி முர்ரே அதிர்ச்சி  தோல்வியடைந்தார் . இதையடுத்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் வீராங்கனை மெர்ட்டன்ஸ், 11-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோல்வியை சந்தித்தனர்.

Categories

Tech |