Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : போபண்ணா,சானியா ஜோடி அபார வெற்றி…!!!

விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையருக்கான முதல் சுற்றில் இந்திய ஜோடி  போபண்ணா, சானியா ஜோடி அபார வெற்றி பெற்றது .

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, சானியா மிர்சா ஜோடி சக இந்திய ஜோடியான ராம்குமார் , அங்கீதா ரெய்னாவுடன் மோதியது.

இதில் குறிப்பாக கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரு இந்திய ஜோடிகள் நேருக்கு நேர் மோதியுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சிறப்புடைய  ஆட்டத்தில் 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் போபண்ணா ,சானியா ஜோடி வெற்றி பெற்று  2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளது .

Categories

Tech |