Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் …. காயத்தால் சிமோனா ஹாலெப் விலகினார் …!!!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக சிமோனா ஹாலெப் விலகினார் .

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடக்க  உள்ளது. இந்த போட்டிக்காக வீரர், வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப்  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். கடந்த மாதம்  நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் விளையாடும்போது காயத்தால் வெளியேறினார்.

இந்த காயம்  முழுமையாக குணமடையாததால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து  விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம் காயம் காரணமாக  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

Categories

Tech |