தமிழகம் உட்பட 5 மாநிலத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி குறிப்பில் , தென்மேற்கு வங்கக்கடல் , தென் தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகம் புதுச்சேரி , கேரளா , கர்நாடகா , ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.