Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

மதுக்கடைகளை திறந்தாச்சு… சமூக இடைவெளியை பின்பற்றி சரக்கு வாங்கும் குடிமகன்கள்!

அசாமில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை முறையாக  பின்பற்றி வரிசையாக நின்று மதுபானத்தை மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையான மளிகை, பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பல மாநிலங்களில் மக்கள் மது கிடைக்காத விரக்தியில் குடிமகன்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அசாமில் குடிமகன்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக நேற்று முதல் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க வேண்டும் எனவும், கடைகளில் பணியாற்றும் அலுவலர்கள் கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அதே நேரத்தில் மேகாலயா அரசு, 4 நாள்களுக்கு மட்டும் மதுக்கடைகளைக் காலை 9 மணி முதல் 4 மணிவரை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் காலையிலேயே கடைகளுக்கு முன்பு திரண்டு அரசின் அறிவுறுத்தலின் படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

அசாம் குடிமகன்களுக்கு இது ஒரு மகிழ்ச்சிதான்.. ஆனால் பிற மாநில குடிமகன்களோ கண்டிப்பாக சோகத்தில் தான் இருப்பார்கள்… ஒருநாளாவது கடையை திறக்கமாட்டார்களா என்று குடிமகன்கள் ஏக்கத்தில் இருக்கின்றனர்.. இதனிடையே ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி இன்று காலை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.. இது குடிமகன்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்..

Categories

Tech |