புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மது விற்பனை செய்தவர்களிடமிருந்து காவல் துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அமரடக்கி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நெல்குடோன் பகுதியில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த காவல் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அட்டைப் பெட்டிகளில் மதுபானங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து 192 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து மது விற்பனை செய்ததற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.