சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது சந்து கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் மது கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சந்து கடையில் அதிக அளவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் ஊரடங்கினால் மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனை செய்து விட்டதால் குவாட்டர் பாட்டில் 1 ரூபாய் 700 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இருப்பினும் மது பிரியர்கள் அந்த தொகையை கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். மேலும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட பட்சத்தில் 1 குவாட்டர் பாட்டில் ரூபாய் 1000 க்கும், ஆப் பாட்டில் ரூபாய் 2000 க்கும் விற்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் வாங்கி பதுக்கி வைத்துள்ள வியாபாரிகளுக்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. அதேசமயத்தில் சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் நபர்களை காவல் துறையினர் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.