சேலம் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் எடப்பாடி கிராமத்திலிருக்கும் ஆலச்சம்பாளையம் காட்டுப்பகுதியிலுள்ள சீனிவாசன் மற்றும் சுப்பராயன் ஆகியோர் வீட்டில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது 746 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து 2 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 8 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.